பாட்னா:

பீகார் மாநிலத்தில் தற்போது சட்டமன்ற கூட்டம் நடைபெற்று வரும் நிலையில், இன்றைய கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த முன்னாள் முதல்வரும், ஆர்ஜேடி தலைவருமான ராப்ரிதேவி கையில் எலிக்கூண்டுடன் சபைக்கு வந்தார்.

இது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், மாநிலஅரசு அரசு ஆவணங்கள் காணாமல் போவதற்கு எலிகளை காணமாக கூறுகிறது… அதனால்தான், அதற்கு தண்டனை வழங்க கோரி,  நாங்கள் எலியை பிடித்துக்கொண்டு வந்துள்ளோம் என்று தெரிவித்து உள்ளார்.

ஊழல் பெருச்சாளியான ராப்ரி, எலிக்கு தண்டனை கொடுக்க அதை பிடித்து வந்துள்ள செயல் நகைச்சுவையை ஏற்படுத்தியது….

பீகார் மாநிலத்தில் தற்போது நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதாதளம் ஆட்சி நடைபெற்று வருகிறது. ஏற்கனவே லாலு தலைமையில் ராஷ்டிரிய ஜனதா தளம் (ஆர்.ஜே.டி) ஆட்சி நடைபெற்றது. அப்போது நடைபெற்ற கால்நடை தீவன ஊழல் மற்றும் பல்வேறு ஊழல் குற்றச்சாட்டில் சிக்கிய லாலு பிரசாத் யாதவ், பல வழக்குகளில் தண்டனை பெற்று சிறையில் காலம் கழித்து வருகிறார்….இவரது மனைவி ராப்ரி தேவி மீதும் குற்றச்சாட்டுக்கள் உளளது. தற்போது ராப்ரி எம்எல்ஏவாக இருந்து வருகிறார்.

இந்த நிலையில், இன்று தனது கட்சி எம்எல்ஏக்களுடன், கூலிங்கிளாஸ்அணிந்து அசத்தலாக சபைக்கு வந்த ஆர்ஜேடி தலைவர்  ராப்ரி தேவி, கையில் ஒரு கூண்டை வைத்திருந்தார். அதனுள்  எலி ஒன்று இருந்தது.

இதுகுறித்து, அங்குள்ள செய்தியாளர்கள் அவரிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில்அளித்த ராப்ரி தேவி,  சட்டசபையில் முக்கியமான கோப்புகள், மருந்துகள் அல்லது மதுபானம் காணாமல் போவதாக மாநில அரசு சொல்கிறது… இதற்கு எலிகள்தான் காரணம் என்று இந்த அரசாங்கம் குற்றம் சாட்டுகிறது, எனவே, எலிகளுக்கு தண்டனை கொடுக்கும் வகையில்  நாங்கள் எலியைப் பிடித்து சட்டமன்றத்திற்கு கொண்டு வந்தோம்” என்று கூறினார்..