ராஞ்சி: மாட்டுத்தீவன ஊழல் காரணமாக ஏற்கனவே 4வழக்கில் சிறைதண்டனை பெற்றுள்ள முன்னாள் மாநில முதல்வரும், மத்திய அமைச்சருமான லாலு டிபரசாத் யாதவ் மீதான ரூ.139 கோடி முறைகேடு தொடர்பான 5வது ஊழல் வழக்கிலும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார். இந்த நிலையில், அவருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.60 லட்சம் அபராதமும் விதித்து ராஞ்சி நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
பீகாரில் முதல்வரா லாலு பிரசாத் யாதவ் இருந்தபோது கால்நடைகளுக்காக தீவனம் வாங்கியதில் பலகோடி ரூபாய் முறைகேடு நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக அவர்மீது தொடரப்பட்ட 5 வழக்குகள் ஏற்கனவே முடிவுற்று அதில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார். இந்த வழக்குகளில் 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து சிறையில் அடைக்கப்பட்டிருந்த லாலு, உடல்நலக்குறைவு காரணமாக ஜாமீனில் வெளியே வந்துள்ளார்.
இந்த நிலையில், 5வது ஊழல் வழக்கான தோரந்தோ கருவூலத்தில் 139 கோடி ரூபாய் முறைகேடு செய்த வழக்கிலும் அவர் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார். இந்த வழக்கை விசாரித்த ராஞ்சி சிறப்பு நீதீமன்றம், கடந்த வாரம், அவர்மீதான தீர்ப்பை உறுதி செய்த நிலையில், லாலு பிரசாத்துடன் சேர்ந்து 39 பேர் குற்றவாளிகள் என்று சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இன்று தண்டனை விவரம் வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, லாலு பிரசாத் யாதவிற்கு 5 ஆண்டு சிறை தண்டனையுடன் 60 லட்ச ரூபாய் அபராதம் விதித்து சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.