
கடந்த 1990-ம் ஆண்டு பிரபல இயக்குனர் ஷாஜி கைலாஷ் இயக்கிய ‘டாக்டர் பசுபதி’ படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகம் ஆனவர் ரிச பாவா.
பின்னர் வில்லன் வேடங்களில் நடித்து பிரபலமானார். ‘இன் ஹரிகர் நகர்’ படம் அவருக்கு மலையாள சினிமா ரசிகர்கள் மத்தியில் பெயர் பெற்றுக் கொடுத்தது.
கடந்த 2010-ம் ஆண்டு சிறந்த நடிகருக்கான கேரள அரசின் விருது பெற்றார்.
இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளாக சிறுநீரக பாதிப்பு மற்றும் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு கொச்சியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார்.
நேற்று மாலை திடீரென சிகிச்சை பலனின்றி அவர் உயிர் பிரிந்தது. அவருக்கு வயது 55.
[youtube-feed feed=1]