பெங்களூரு:
காவேரி நதி … எங்கள் உயிர்நாடி… (River Cauvery…our life line) என்றும், காவிரித் தீயை மழையால் மட்டுமே அணைக்க முடியும் என்றும், நடிகர் பிரகாஷ் ராஜ் கர்நாடகாவில் வாழும் தமிழர்களுக்கு கடிதம் எழுதி உள்ளார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி தமிழகத்தில் கடந்த 15 நாட்களாக அரசியல் கட்சியினர், சமுக அமைப்புகள், மாணவர்கள் என அனைத்து தரப்பபினரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், நடிகர் பிரகாஷ்ராஜ் தனது டுவிட்டர் வலைதளபதிவில், காவிரி எங்கள் உயிர்நாடி என்று தெரிவித்து உள்ளார்.
காவிரி பிரச்சினை குறித்து நடிகர் பிரகாஷ்ராஜ் கடிதம் ஒன்று எழுதி அதை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவேற்றி உள்ளார்.
அதில், காவிரி எங்கள் உயிர் நாடி என்றும், நாங்கள் குடிமக்களாக இருக்கிறோம் .. எங்கள் தலைவர்கள் காவிரி பிரச்சினை பற்றி பேசுகிறார்கள் என்றும், தண்ணீருக்காக மூன்றாம் உலகப்போர் நடக்கும் என்று விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளார்கள் என்றும், ஆ னால் இந்தியாவில் பல ஆண்டுகளாக இந்த பிரச்சினை உள்நாட்டு போராக நடந்து வருகிறது என்று கூறி உள்ளார்.
வறட்சி காலத்தில் தமிழகத்திலும் கர்நாடகத்திலும் தண்ணீர் பிரச்னை வரத்தொடங்குகிறது. இந்த போராட்டத் தீயை மழையால் மட்டுமே அணைக்க முடியம் என்றம், காவிரி நீரிலிருந்து அரசியலை அகற்றுங்கள் எல்லாம் தானாக சரியாகும். ஒரு தாய்ப்பால் குடித்த சகோதரர்கள் சண்டையிட்டுக் கொள்ளக்கூடாது என்றும், ஒரு நதி நீரைக் குடித்து அதில் விவசாயம் செய்து வாழ்ந்த மக்கள் சண்டையிடுவது முறையல்ல எனவும் அவர் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் ஒரு அறிக்கை ஒன்றையும் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.