ஜெய்ப்பூர்: பிரபல மல்யுத்த வீராங்கனை சகோதரிகளான கீதா மற்றும் பாபிதா போகட்டின் உறவினரான மல்யுத்த வீராங்கனை ரித்திகா போகாட், ஒரு பாயிண்டில் தோல்வியை சந்தித்ததால், மனமுடைந்து  தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது.
ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர்கள்  கீதா போகாட்  மற்றும் பாபிதா போகாட் சகோதரிகள்.  மல்யுத்த வீராங்கனைகளான  இவர்கள் இந்தியாவுக்காக  பல்வேறு சர்வதேச  போட்டிகளில் கலந்துகொண்டு  பதக்கங்களை குவித்து வருகின்றனர். இவர்களின் வாழ்க்கை வரலாறே தங்கல் என்ற  பெயரில் அமிர்கான் திரைப்படமாக எடுத்து வெளியிட்டார். இந்த திரைப்படமும் நாடுமுழுவதும் பரபரப்பாக திரையரங்குகளில் ஓடி மாபெரும் வெற்றியை பெற்றது.
கீதா மற்றும் பாபிதா போகட்டின் தாய் வழி  உறவினராக ரித்திகா போகட்டும் (வயது 17)  மல்யுத்த வீராங்கனை இருந்து வருகிறார். இவரும் பல போட்டிகளில் களமிறங்கி வெற்றிகளை குவித்து வந்துள்ளார். மாநில அளவிலான துணை ஜூனியர், ஜூனியர் பெண்கள் மற்றும் ஆண்கள் மல்யுத்த போட்டிகளில் விளையாடிக் கொண்டிருந்தார்.
மார்ச் 14 அன்று விளையாடிய இறுதிப் போட்டியில் ரித்திகா 1 புள்ளியால் தோல்வி அடைந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்து காணப்பட்டவர்,  3 நாட்களுக்குப் பிறகு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.  அவரது உடலை கைப்பற்றிய காவல்துறையினர், ரித்திகா போகட் தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்றும், அறையில் இருந்த மின்விசிறியில்   தூக்கு மாட்டிக்கொண்டு உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார் என்றும் தெரிவித்து உள்ளனர்.
தானின் ஜுன்ஜுனுவில் உள்ள ஜெய்த்பூர் கிராமத்தில் வசிக்கும் ரித்திகா, ஹரியானாவில் உள்ள மகாவீர் போகாட் விளையாட்டு அகாடமியில் ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக மல்யுத்தத்தை கற்றுக் கொண்டிருந்தார்.  பிரபல மல்யுத்தவீரரான  துரோணாச்சார்யா விருது பெற்ற மகாவீர் சிங் போகாட்டின் கீழ் பயிற்சி பெற்று வந்ததாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து  கூறியுள்ள அரியானாவின் சார்க்கி தாத்ரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராம் சிங் பிஷ்னோய், ரிதிகாவின் மரணம் குறித்து விசாரணை தொடங்கப்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ளார்.
ரித்திகாவின் மரணம் குறித்து டிவிட் பதிவிட்டுள்ள ராஜஸ்தான் சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் விஜய் குமார் சிங்,  “ஒரு சிறந்த தொழில் வாழ்க்கையை மேற்கொண்டிருந்த  ரிட்டிகாஃபோகாட்டை நாங்கள் இழந்தோம் என்ற செய்தி,  பயங்கரமான செய்தி. சில தசாப்தங்களுக்கு முன்னர் இருந்த இடத்திலிருந்து உலகம் மாறிவிட்டது. தடகள வீரர்கள் இதற்கு முன்னர் இல்லாத அழுத்தங்களை எதிர்கொள்கின்றனர். இந்த அழுத்தங்களை சமாளிப்பதே அவர்களின் பயிற்சியின் ஒரு முக்கிய பகுதியாக உள்ளது என தெரிவித்துள்ளார்.