இந்தித் திரையுலகின் முன்னணி நடிகரான அஜய் தேவ்கன் நேற்று (மார்ச் 3) தனது 51-வது பிறந்த நாளைக் கொண்டாடினார்.

இதற்காக நடிகர் ரித்தேஷ் தேஷ்முக் அவருக்கு டிக் – டாக் வீடியோ ஒன்றைப் பகிர்ந்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அந்த டிக் டாக் வீடியோவை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார் ரித்தேஷ். இதில் அவர் சமையலறையில் பாத்திரங்களைக் கடுப்பாகத் தேய்த்துக் கொண்டிருக்கிறார். மனைவி ஜெனிலியா இன்னும் சில பாத்திரங்களைக் கொண்டு வந்து தேய்க்கச் சொல்கிறார். அவர் கையில் ரித்தேஷை மிரட்ட பூரி கட்டை ஒன்றும் வைத்துக் கொண்டிருக்கிறார். உடனே ரித்தேஷ், அஜய் தேவ்கனின் தில்வாலே படத்தில் வரும், ‘எனக்கும் ஒரு காலம் வரும், அப்போது பார்’ என்ற பொருள் வருமாறு ஒரு பாடலைப் பாடுகிறார்.இந்த வீடியோவுடன் பிறந்த நாள் வாழ்த்தை தெரிவித்துள்ளார் .