மும்பை: சிறந்த அனுபவமும், நல்ல பேட்டிங் திறனும் கொண்டிருக்கும் காரணத்தினால்தான், ரிஷப் பண்ட்டிற்கு பதிலாக, தினேஷ் கார்த்திக் தேர்வானார் என்று இந்திய கேப்டன் விராத் கோலி கூறியுள்ளார்.

இந்திய விக்கெட் கீப்பராக மகேந்திர சிங் தோனி, கேள்விக்கிடமின்றி இடம்பெற்றிருக்கும் சூழலில், தினேஷ் கார்த்திக்கின் அனுபவம் மற்றும் பேட்டிங் திறனின் அடிப்படையில் அவர் 15 பேர் அணியில் இடம்பெற்றுள்ளார்.

33 வயதான தினேஷ் கார்த்திக், 21 வயதான இளம் வீரர் ரிஷப் பண்ட்டுடன் கடுமையான போட்டியை சந்தித்தே இந்தியாவின் 15 பேர் அணியில் இடம்பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ரிஷப் பண்ட் தனது இடத்தை இழக்கலாம் என பல கிரிக்கெட் விமர்சகர்கள் ஏற்கனவே கூறிவந்தது நாம் கவனிக்கத்தக்கது.

“ஒருவேளை, போட்டியின்போது, நமது தோனிக்கு மாற்றாக ஒருவரை தேடும் நிலை ஏற்பட்டால், தினேஷ் கார்த்திக் அந்த சூழலில் மிகவும் முக்கியமான நபராக இருப்பார்” என்று விராத் கோலி தெரிவித்துள்ளார்.