ஸ்ரீஹரிகோட்டா:

பூமி கண்காணிப்பு செயற்கைகோளுடன் பி.எஸ்.எல்.வி. சி-48 ராக்கெட் நாளை மாலை 3.25 மணிக்கு விண்ணில் ஏவப்பட உள்ளதாக இஸ்ரோ அறிவித்து உள்ளது.

ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 1-வது ஏவு தளத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி-48 ராக்கெட் மூலம் இஸ்ரோ தயாரித்துள்ள, ‘ரீசாட்-2பிஆர்1’ எனப்படும்  பூமியை கண்காணிக்கும் செயற்கைகோள் மற்றும் 9 வணிக ரீதியிலான செயற்கை கோளும்  நாளை மாலை 3.25 மணிக்கு விண்ணில் ஏவப்படுகிறது.

ராக்கெட்டில் எரிபொருள் நிரப்பும் பணி நிறைவடைந்ததை தொடர்ந்து, இறுதிக்கட்ட பணியான ‘கவுண்ட்டவுன்’ இன்று மாலை தொடங்குகிறது.

பி.எஸ்.எல்.வி. சி-48 ராக்கெட் விண்ணில் ஏவப்படுவதை நேரில் பார்வையிட பொதுமக்களுக்கு இஸ்ரோ வாய்ப்பு வழங்கி உள்ளது. ஆர்வமுள்ளவர்கள், இணையதளம்மூலம்  பதிவு செய்து அனுமதி பெற இஸ்ரோ அறிவுறுத்தி உள்ளது.