ரியோ:
லிம்பிக்கில் கலந்துகொள்ள இருந்த மொராக்கோ நாட்டு குத்துசண்டை வீரர், இரு பெண்களை தாக்கியதாக கைது செய்யப்பட்டுள்ளார்.
பிரேசில் நாட்டின் தலைநகரம் ரியோவில் ஒலிம்பிக் போட்டி இன்று துவங்கியுள்ளது. இந்த போட்டியில் கலந்துகொள்வதற்காக வந்திருக்கிறார்  மெராக்கோ நாட்டு குத்துசண்டை வீரர் சாதா, ஏற்கெனவே முரடர் என்று பெயர் எடுத்தவர் இவர். அதோடு இவர் மீது பாலியல் புகாரும் உண்டு.
348b
ஒலிம்பிக் கிராமத்தில் தங்கியிருந்த இவர், அங்கு துப்புரவு பணியில் ஈடுபட்டிருந்த  இரு பெண்களை திடீரென தாக்கியிருக்கிறார். அவர்களது முகத்தில், தனது கைகளால் சரமாரியாக குத்தியிருக்கிறார்.  இதில் அந்த இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது.

குத்துசண்டை வீரர் சகா
குத்துசண்டை வீரர் சகா

இதையடுத்து குத்துசண்டை வீரர் சாதா மீது,  காவல்துறை வழக்கு பதிந்தது. விசாரணைக்கு பிறகு சாதா கைது செய்யப்பட்டார்.
அவரை 15 நாட்கள் தடுப்புக்காவலில் வைக்கும்படி  பிரேசில் நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.