ரியோடி ஜெனிரோ:
ரியோவில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் பேமின்டன் போட்டியில் பி.வி.சிந்து அரையிறுதிக்கு தகுதி பெற்றார்.
ஏற்கனவே நடைபெற்ற ‘ரவுண்ட் 16’ போட்டியில் சீன தைபேயின் டாய் இங்கை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார். காலிறுதியில் அவர் உலகின் 2ம் நிலை வீராங்கனையான சீனாவின் இகான் வாங்கை எதிர் கொண்டார். காலிறுதியில் சீனாவின் வாங் யிகானை பி.வி.சிந்து வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது. 2-ஆம் நிலை வீராங்கனையான வாங்கை 22-20, 21-19 என்ற நேர் செட்டில் வென்று பி.வி.சிந்து அரை இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.
காலிறுதி போட்டியில் இந்திய வீராங்கனை சிந்து போராடி புள்ளிகள் எடுத்ததால், ஆட்டத்தில் அனல் பறந்தது. முதல் செட்டை 22-20 என வென்ற சிந்து, 2வது சுற்றிலும் 21-19 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார்.
மல்யுத்தம்: ஹர்தீப் சிங் தோல்வி
ரியோவில் நேற்று நடைபெற்ற கிரிக்கோ ரோமன் 98 கிலோ ஆடவர் மல்யுத்தப் போட்டியில் இந்தியாவின் ஹர்தீப் சிங் துருக்கியின் சென்க் இடமிடம் 1-2 என்ற செட்டில் தோல்வி அடைந்தார்.