பிக் பாஸ் 4 முடிய இன்னும் ஒரு வாரம் மட்டுமே இருக்கிறது. அதனால் போட்டி சற்று கடுமையாகவே மாறி இருக்கிறது. இந்த வாரம் போட்டியாளர்களுக்கு டிக்கெட் டு ஃபினாலே பெறுவதற்காக போட்டியாளர்கள் டாஸ்குகளில் மும்முரமாக விளையாடி வருகின்றனர்.

இன்று வெளியான முதல் ப்ரோமோவில், டிக்கெட் டு ஃபினாலேவின் ஐந்தாம் டாஸ்க் வழங்கப்பட்டது. வளையத்திற்குள் இருக்கும் பந்தை சுற்றிக்கொண்டு நடந்து வர வேண்டும். ஆரம்பத்திலே ரம்யா, சோம், ஆரி, கேபி ஆகியோர் அவுட்டாக.. பாலாஜி மற்றும் ரியோ சிறப்பாக விளையாடி வந்தனர். இறுதியில் பாலாஜியும் அவுட் ஆக, ரியோ அசத்தலாக விளையாடி வெற்றி பெற்றார்.

இரண்டாம் ப்ரோமோவில், பாலாஜியின் கேம் குறித்து ரியோ மற்றும் சோம் ஆலோசிக்கின்றனர். கார்டன் ஏரியாவில் இருவரும் சேர்ந்து பேசுகையில், பழைய பாலா காணோம் என்று சொல்லி சொல்லியே அவன் ஒருமாறி ஆயிட்டான் பாவம் என்றனர். கேம் என்று வரும் போது பாலா சிறப்பாக விளையாடுவதாகவும் அவர்கள் பேசிக்கொண்டிருக்கின்றனர்.

இன்று வெளியான மூன்றாம் ப்ரோமோவில், ஹவுஸ்மேட்ஸ் அனைவரும் ஒருவரின் குறை நிறைகளை கூறி வருகின்றனர். அப்படியிருக்க ஆரி குறித்து சோம் மற்றும் ரியா பேசினார்கள். ஆரி மற்றவர்கள் பற்றி குறை கூறும் விஷயம் எனக்கு பிடிக்கவில்லை. நான் இல்லாத போது என்னை பற்றி பிறரிடம் குறை கூறுவானோ என்று தோன்றுகிறது. அதன் பின் பேசிய ரியோ, ஒரு விஷயத்தை சுருக்கமாக பேசிட்டு போய்ட்டாருனா, அவருக்கு நிகர் யாரும் இல்லை என்று பாராட்டினார்.