ரிலையன்ஸ் குழும நிறுவனமான ரிலையன்ஸ் ஸ்ட்ராட்டஜிக் பிசினஸ் வென்ச்சூர் லிமிடெட், அமெரிக்காவின் ஸ்கை-டிரான் நிறுவன பங்குகளை சுமார் 195 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளது. இதனால், ரிலையன்ஸ் நிறுவனத்தின் பங்குகள் கிடு கிடுவென உயர்ந்துள்ளது.
போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்காமல், உயர்மட்ட பாதையில் காந்த சக்தி இழு விசையில் இயங்க கூடிய போக்குவரத்து தொழில்நுட்பத்தை ஸ்கை-டிரான் அறிமுகம் செய்ய இருக்கிறது.
இதற்கான ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பணிகளில் முழுமூச்சாக ஈடுபட்டுவருகிறது இந்நிறுவனம்.
இந்நிறுவனத்தின் பங்குகளை வாங்கியதன் மூலம், நேற்று வர்த்தகம் முடியும் நேரத்தில் 2085.80 ரூபாயாக இருந்த ரிலையன்ஸ் நிறுவன பங்கின் விலை தற்போது 2103.00 ரூபாயாக உயர்ந்திருக்கிறது.
ஸ்கை-டிரான் நிறுவனம், குறைந்த செலவில் போக்குவரத்து நெரிசல் இன்றி, சுற்றுசூழலுக்கு மாசு ஏற்படாத வகையில் ஆய்வு செய்து வரும் இந்த போக்குவரத்து தொழில்நுட்பம், இந்தியா உள்ளிட்ட பல்வேறு உலக நாடுகளில் வரவேற்பை பெரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.