வேலை முடித்து வீட்டுக்கு வந்து “அப்பாடா” என்று உட்காந்தவுடன் மறுபடியும் உங்கள் ஆபீஸில் இருந்து அழைப்பு வந்தால் உங்களுக்கு எப்படி இருக்கும்? அதேபோல வார இறுதிகளில் குடும்பத்துடனோ நண்பர்களுடனோ வெளியில் சென்று மகிழ்ச்சியாக இருக்கும் வேளையில் திடீரென்று மொபைலில் உங்கள் பாஸ் அழைத்து அவசரமாக ஆபீஸ் வரை வந்துவிட்டுப்போ என்றால் உங்களுக்கு எவ்வளவு எரிச்சலாக இருக்கும்!
பிரான்ஸ் நாடு இந்த தொல்லையை தடுக்க ஒரு புதிய சட்டம் கொண்டு வந்து பணியாளர்கள் வயிற்றில் பாலை வார்த்திருக்கிறது. 50 அல்லது அதற்கு அதிகமான ஊழியர்களைக் கொண்ட நிறுவனங்கள் பணிநேரம் போக மற்ற நேரங்களில் அவர்களுக்கு போன் செய்தோ, குறுஞ்செய்தி அல்லது ஈமெயில் அனுப்பியோ தொந்தரவு செய்ய தடை விதித்து என்று புதிய சட்டம் பிறப்பித்திருக்கிறது. இந்த சட்டத்துக்குப் பெயர் “துண்டித்துக்கொள்ளும் உரிமை (Right to Disconnect)” என்பதாகும்.
இது பணி நேரங்களில் கடினமாக உழைத்துவிட்டு வீடுதிரும்பும் மக்களை நிரந்தரமாக மன அழுத்தத்திலேயே வைத்திருக்கும் விஷயமாகும். இதன்மூலம் பனியாளர்கள் உடலளவில் மட்டுமே அலுவலகத்தை விட்டு வந்திருப்பார்கள் அவர்கள் மனமோ வேலை குறித்த அழுத்தத்தியேலேயே இருக்கும். இது அவர்களை காலப்போக்கில் நொறுக்கிவிடும் என்று அந்நாட்டு அரசு தெரிவித்திருக்கிறது.
இச்சட்டத்தை மீறும் நிறுவனங்களுக்கு தண்டனைகள் எதுவும் இல்லை. ஆனால் இச்சட்டம் பணியிடத்தில் ஒரு ஆரோக்கியமான சூழல் நிலவ உதவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சட்டம் பிரஞ்சு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது