ராகுலை காங்கிரஸ் தலைவராக்க வேண்டும் – அம்ரீந்தர் சிங்

டில்லி,

ராகுல்காந்தியை காங்கிரஸ் கட்சித்  தலைவராக நியமிக்க இதுதான் உகந்த நேரம் என்று அம்ரீந்தர் சிங் வலியுறுத்தியுள்ளார்.

பஞ்சாப்சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி மொத்தமுள்ள 117 தொகுதிகளில் 77 இடங்களில்  வென்று ஆட்சியை பிடித்துள்ளது. அம்மாநிலத்தின் காங்கிரஸ் கட்சித் தலைவர் அம்ரீந்தர் சிங் முதலமைச்சராக நாளை பதவி ஏற்கிறார்.

இந்நிலையில் நேற்று டில்லி வந்த அம்ரீந்தர், ராகுல்காந்தியை நேரில் சந்தித்து சண்டிகரில் நடைபெறும் பதவியேற்பு விழாவில் பங்கேற்க அழைப்பு விடுத்தார்.

இதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், மரியாதை நிமித்தமாக ராகுலை சந்தித்ததாக கூறினார்.

மேலும், கட்சியின் தலைவராக ராகுலை நியமிக்கவேண்டும். அதற்கு இது நல்ல தருணம் என்றும் அவர் தெரிவித்தார்.


English Summary
Right time to elevate Rahul Gandhi as Congress chief: Captain Amarinder Singh