கள்ளக்குறிச்சி:

ள்ளக்குறிச்சி புதிய மாவட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, தமிழகத்தில் அனைத்து அரிசி ரேசன் அட்டைதாரர்களுக்கும், பொங்கல் பரிசாக ரூ.1000 உடன் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என அறிவித்தார்.

தமிழகத்தின் 34வது மாவட்டமாக  கள்ளக்குறிச்சி இன்று உதயமான நிலையில், நிகழ்ச்சியில் பேசிய முதல்வர்  எடப்பாடி பழனிசாமி, கடந்த ஆண்டு வழங்கப்பட்டதை போலவே இந்த ஆண்டும் அரிசி ரேசன் அட்டைதாரர்களுக்கு தலா 1000 ரூபாய் பொங்கல் பரிசு வழங்கப்படும் என அறிவித்தார்.

இந்த ஆண்டு நல்ல மழை பெய்துள்ளது. விவசாயிகள் தங்களிடம் உள்ள பணத்தை இடுபொருள்களுக்கும், பிற பணிகளுக்கும் செலவழித்துவிட்ட நிலையில் அவர்கள் போதிய வருவாய் இன்றி சிரமப்படும் ஏழைக் குடும்பங்கள் தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை இந்த ஆண்டும் சிறப்பாகக் கொண்டாட, சென்ற ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் அரிசி அட்டை வைத்துள்ள குடும்பங்கள் அனைத்திற்கும், குடும்பத்திற்குத் தலா 1000 ரூபாயுடன், 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, கரும்பு, முந்திரி, திராட்சை உட்பட பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் இந்த நேரத்திலே தெரிவித்துக் கொள்கிறேன்.

இது உங்களுடைய அரசு, மக்களுடைய அரசு, மக்களின் தேவைகளை அறிந்து நிறைவேற்றுகின்ற ஒரே அரசு அண்ணா தி.மு.க. அரசு.

இவ்வாறு நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் கூறினார்.