எதிர்ப்பு: வங்கிக்கணக்கை திரும்பப் பெற்ற நபர்?

Must read

நெட்டிசன்:
சாதாரணமாகவே வங்கிகளில் வாடிக்கையாளர்களுக்கு மரியாதை இல்லை என்ற கருத்து பரவலாக உண்டு. தற்போது மணிக்கணக்காக காத்திருந்து ரூபாய் நோட்டுகளை மாற்ற வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள் மக்கள். பல இடங்களில் வங்கி அலுவலர்களுடன் வாக்குவாதம் ஏற்படுவதாகவும் தகவல்கள் வந்துகொண்டிருக்கின்றன.
இந்த நிலையில், வங்கி வாடிக்கையாளர் ஒருவர், தனக்கு உரிய மரியாதை அளிக்கப்படவில்லை என்பதால் கணக்கை திரும்பப்பெறுவதாகவும், தனது இருப்பில் உள்ள பணத்தைத் திருப்பிக்கொடுக்கும்படியும் வங்கி மேலாளருக்கு எழுதியதாக ஒரு கடிதம் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தஞ்சை மாவட்டம் வடகாடு பகுதியைச் சேர்ந்த அன்பழகன் என்பவர், அதே பகுதியில் இயங்கும் இந்தியன் ஓவர்சிஸ் வங்கி மேலாளருக்கு எழுதியதாக இருக்கிறது அக் கடிதம்.
%e0%ae%b5%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf
 

More articles

Latest article