சென்னை,
கடந்த 7ந்தேதி நடைபெற்ற அதிரடி ரெய்டு எதிரொலியான நடிகர் சரத்குமார், தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோரிடம் இன்று வருமான வரித்துறையினர் விசாரணை செய்கின்றனர்.

சென்னை, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் டிடிவி தினகரனுக்கு ஆதரவாக அந்த தொகுதியில் பணப்பட்டுவாடா செய்த விவகாரம் தொடர்பாக அமைச்சர் விஜயபாஸ்கர், நடிகர் சரத்குமார், எம்ஜிஆர் பல்கலை துணைவேந்தர் கீதாலட்சுமி, சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோரிடம் வருமான வரித்துறையினர் இன்று விசாரணை நடத்த உள்ளனர்.
கடந்த 7 ம் தேதி தமிழகம் முழுவதும் சுமார் 30 இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி ரெய்டு மேற்கொண்டனர். அப்போது, கைப்பற்றப்பட்ட ஆவணங்களில் ஆர்.கே.நகர் தொகுதியில் பணம் பட்டுவாடா நடைபெற்றது உறுதியானது. அதைத்தொடர்ந்து தேர்தலை ரத்து செய்து அறிவித்தது இந்திய தேர்தல் ஆணையம்.


இதற்கிடையில், ரெய்டு எதிரொலியாக அமைச்சர் விஜயபாஸ்கர், சரத்குமார், கீதாலட்சுமி ஆகிய மூவரும் இன்று சென்னை நுங்கபாக்கத்தில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜரா கும்படி நேற்று சம்மன் அனுப்பப்பட்டது.
சரத்குமார் 10.30 மணிக்கும், விஜயபாஸ்கர் 11 மணிக்கும், கீதாலட்சுமி 11.30 மணிக்கும் ஆஜராக வேண்டும் என சம்மனில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்நிலையில் இன்று அவர்களிடம் நடைபெறும் விசாரணையை அடுத்து அமைச்சர் கைது செய்யப்படுவாரா? என பரபரப்பு நிலவி வருகிறது.