சென்னை

ய்வு பெற்ற நீதிபதி சந்துரு தலைமையிலான குழு அரசுப் பள்ளிகளில் சாதி அடையாளங்களை உடனடியாக நீக்க வேண்டும் என பரிந்துரைத்துள்ளது.

தமிழக அரசு ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு தலைமையிலான ஒரு நபர் குழுவை பள்ளி,  கல்லூரி மாணவர்களிடையே சாதி இன உணர்வுகளால் உருவாகும் வன்முறைகளை தவிர்க்கவும்,  நல்லிணக்கம் ஏற்படுத்தவும் வழிமுறைகளை வகுத்திட அமைத்தது. இன்று இந்த குழு தனது அறிக்கையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் சமர்பித்தது.

அந்த அறிக்கையில்

  • அரசு பள்ளிகளில் சாதி அடையாளங்களை உடனடியாக நீக்க வேண்டும்.
  • கள்ளர் மறுவாழ்வு மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை என்பது உள்பட சாதி அடையாளங்கள் பள்ளிகளின் பெயர்களில் இருக்கக் கூடாது.
  • பள்ளிகளுக்கு நன்கொடை அளிப்பவர்களின் பெயர்களில் குறிப்பிடும்போதும் சாதி அடையாளங்கள் கூடாது.
  • சாதிய அடையாளங்கள் இருக்காது என்ற உறுதிமொழியை பெற்ற பிறகே புதிய பள்ளி தொடங்க அனுமதி தர வேண்டும்.
  • தனியார் பள்ளிகளுக்கு வைக்கப்பட்டுள்ள சாதி பெயர்களை நீக்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  • சாதிரீதியிலான பள்ளிகளை அந்தந்த சாதிக்கான அரசுதுறைகள் நடத்தி வருவதை தவிர்த்து, பள்ளி கல்வி துறையின் கீழ் கொண்டு வர வேண்டும்.
  • உயர்நிலை பள்ளி மற்றும் மேல் நிலைப் பள்ளி ஆசிரியர்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் பணியிடை மாற்றம் செய்ய வேண்டும்.
  • அந்த பகுதியில் உள்ள பெரும்பானமை சாதியை சேர்ந்தவரை CEO, DEO, BEO மற்றும் தலைமை ஆசிரியராக நியமிக்க கூடாது.
  • அரசு நடத்து பள்ளிகள்,  கல்லூரிகள், பல்கலைகழகங்களில் உள்ள ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கப்பட வேண்டும்.
  • பள்ளி கல்லூரி ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு சமுதாய பிரச்னைகள்,  சாதி பாகுபாடு,  பாலியல் வன்முறை தொடர்பான சட்டங்கள், பாலியல் துன்புறுத்தல்கள், போதை பொருள் தடுப்பு, எஸ்.சி & எஸ்.டிக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக விழிப்புணர்வு முகாம் நடத்த வேண்டும்”

என்று குறிப்பிட்டுள்ளது.