டில்லி

ச்சநீதி மன்றத்தில் தனிமனித உரிமை பற்றி அளிக்கப்பட்ட தீர்ப்பின் படி இந்தியச் சட்டம் 377ன் படி இயற்கைக்கு மாறான பாலுறவை அங்கிகரிக்க வேண்டி இருக்கும் என ஓய்வு பெற்ற  நீதிபதி ஏ பி ஷா தெரிவித்துள்ளார்.

இந்தியச் சட்டம் 377ன் படி இயற்கைக்கு மாறான பாலுறவு தடை செய்யப்பட்டுள்ளது.  இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் ஜூலை 2009ல் ஓரின பாலுறவு சம்மதத்துடன் நடந்தால் குற்றமில்லை, என சொல்லப்பட்டது.  பின்பு அதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் அப்பீல் செய்யப்பட்டது.   விரைவில் இந்த அப்பீலுக்கு தீர்ப்பு வர உள்ளது.

இந்நிலையில் ஓய்வு பெற்ற நீதிபதி ஏ பி ஷா இது பற்றி கூறுகையில், “நேற்று சுப்ரீம் கோர்ட் வழங்கப்பட்ட தீர்ப்பின் படி தனிப்பட்ட அந்தரங்கங்கம் என்பது தனிமனித உரிமை என அறிவிக்கப்பட்டுள்ளது.   அதன்படி யாருடைய படுக்கையறையில் என்ன நடக்கிறது என்பதும் தனி மனித உரிமை ஆகி விடுகிறது.    எனவே சட்டம் 377 ஐ ஆதரிக்கின்றவர்களின் வாதம் இந்த தீர்ப்பின் படி செல்லாதது ஆகிவிடும்.   எனவே விருப்பமில்லாத ஒரினப் பால் உறவோ அல்லது மைனர்களை பாலியல் வன்கொடுமை செய்வதோ தவறு என மட்டுமே இவர்களால் வாதாட முடியும்.   அது இயற்கைக்கு மாறான பாலுறவை இந்த தீர்ப்பை சுட்டிக் காட்டி அரசின் அங்கீகாரத்தை கோருவதில்தான் போய் முடியும்” என தெரிவித்துள்ளார்.