டில்லி,

டென்னிஸ் போட்டிகளிலிருந்து ஒய்வு பெறுவதாக இந்திய வீரர் சோம்தேவ் தேவ் வர்மன் அறிவித்துள்ளார்.

சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக சோம்தேவ் தேவ் வர்மன் அறிவித்துள்ளார்.

31வயதாகும் சோம்தேவ்  வர்சீனியா பல்கலைக்கழகத்தில் படிக்கும்போது அமெரிக்க தேசிய கல்லூரி விளையாட்டுக் கழகத்தின் (NCAA) ஒற்றையர் டென்னிசுப் போட்டிகளில் தொடர்ந்து இருமுறை வெற்றி பெற்றதைத் தொடர்ந்து புகழ்பெற்றார்.

2010-இல் சோம்தேவ் தனிநபர் பிரிவில் தங்கமும்,  இரட்டையர் பிரிவில் சனம் சிங் என்ற வீரருடன் இணைந்து தங்கமும் வென்றுள்ளார்.

இவர் ரஞ்சனா மற்றும் பிரவஞ்சன் தேவ் வர்மன் தம்பதியினருக்குப் பிறந்தவர். இந்தியாவில் கவுகாத்தியில் பிறந்த   இவர் 2005-08 ஆண்டுகளில் வர்சீனியா பல்கலைக்கழகத்தில் சமூகவியல் பட்டபடிப்பு படித்தார்.[

2008ஆம் ஆண்டு முதல் தொழில்முறையில் டென்னிஸ் போட்டிகளில் கலந்துகொண்டு ஆடிவரும் தேவ்வர்மன் ஆண்டு துவக்கத்தில் இருந்த தரவரிசை 1033லிருந்து முன்னேறி ஆண்டின் இறுதியில் 204 தரவரிசை பிடித்தார்.

2009-ல் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான டேவிஸ் கோப்பை டென்னிசில் இந்திய வீரர் சோம்தேவின் அபாரமான ஆட்டத்தால் இந்திய அணி 11 ஆண்டுகளுக்கு பிறகு முதல் முறையாக உலக சுற்றுக்கு முன்னேறியது குறிப்பிடத்தக்கது.