புதுடெல்லி: 
பிசிஆர் சோதனை செய்யப்பட்ட அனைவருக்கும் உடனடியாக மீண்டும் கொரோனா பரிசோதனை செய்தாக வேண்டும் என்று மத்திய சுகாதார அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது.
இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில், பிசிஆர் சோதனைகள் செய்யப்பட்ட அனைவருக்கும் மீண்டும் கொரோனா பரிசோதனை கட்டாயம் செய்ய வேண்டும் என்று மத்திய மாநில சுகாதார அமைச்சகம் அனைத்து மாநிலங்களுக்கும் வலியுறுத்தியுள்ளது.
இந்தியாவில் இன்று ஒரே நாளில் கிட்டத்தட்ட ஒரு லட்சம் பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டதால், மத்திய மாநில சுகாதார அமைச்சகம் இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரியவந்துள்ளது.
ஆர்டி-பிசிஆர் மூலம் கொரோனா சோதனைகள் செய்து, தொற்று பாதிப்பு எதுவும் இல்லை என்று உறுதி செய்யப்பட்டவர்கள் அனைவருக்கும் மீண்டும் பரிசோதனை செய்தாக வேண்டும் என்று சுகாதாரத்துறை அமைச்சகம் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு வலியுறுத்தியுள்ளது.
பிசிஆர் மூலம் சோதனை செய்யப்பட்டு கொரோனா பாதிப்பு இல்லை என்று உறுதி செய்யப்பட்ட அனைவருக்கும், உடனடியாக மீண்டும் பரிசோதனை செய்து அவர்களில் கொரோனா நோய் தொற்று உள்ளவர்களை உடனடியாக தனிமைப்படுத்துதல் அல்லது மருத்துவமனையில் அனுமதிப்தை உறுதி செய்ய வேண்டும் என்று மத்திய மாநில சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதற்கிடையில் மத்திய சுகாதார அமைச்சகத்தின் தரவுகள் படி இந்தியாவில் இன்று ஒரே நாளில் 95,735 பேர்  கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.