c
சென்னை,:   பிளஸ்–2 தேர்வு கடந்த மார்ச் 4-ந்தேதி துவங்கி  ஏப்ரல் 1-ந்தேதி வரை நடைபெற்றது. தமிழகம் மற்றும் புதுச் சேரியில் சுமார் எட்டு லட்சம் மாணவ-மாணவிகள் தேர்வு எழுதினார்கள். விடைத்தாள் திருத்தும் பணி மார்ச் 14-ந்தேதி துவங்கி  ஏப்ரல் 23-ந்தேதி வரை நடைபெற்றது.
இதையடுத்து மதிப்பெண்கள் பதிவு செய் யும் பணி சென்னை கோட்டூர்புரத் தில் உள்ள டேட்டா சென் டரில் நடைபெற்று வருகிறது.   இரவு – பகலாக நடைப் பெற்று வரும் இந்த வேலை ஒரு சில நாட்களில் நிறைவு பெறுகிறது. கடந்த ஆண்டு மே மாதம் 7-ந்தேதி பிளஸ்-2 தேர்வு முடிவு வெளியிடப்பட்டது.  இந்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடப்பதால் விடைத்தாள் திருத்தும் பணியில் சற்று தொய்வு  ஏற்பட்டது.
ஆனாலும் கடந்த ஆண்டைப்போலவே,மே 7ம் தேதி ப்ளஸ் டூ ரிசல்ட் வெளியாகும் என்று கூறப்படுகிறது. சற்று தாமதமானால் 9ம் தேதி வெளியாகும் என்றும் இன்னொரு தகவல் உலவுகிறது.