வாஷிங்டன்:
ஆன்லைன் வாக்கெடுப்பு மூலம் அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் மீண்டும் ட்விட்டரில் சேர்க்கப்பட்டுள்ளார்.
அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்பின் ட்விட்டர் கணக்கு கடந்த 2020-ஆம் ஆண்டு முடக்கப்பட்டது. வெறுப்புணர்வை தூண்டும் வகையில் பேசியதாக டிரம்பின் கணக்கு முடக்கப்பட்டது. தற்போது ட்விட்டரை எலான் மஸ்க் வாங்கியிருக்கும் நிலையில், டிரம்பிற்கு மீண்டும் அவரது ட்விட்டர் கணக்கை பயன்படுத்த அனுமதி வழங்குவது குறித்து ஆன்லைனில் வாக்கெடுப்பு நடைபெற்றது. அதில் டிரம்பின் ட்விட்டர் கணக்கு மீட்கப்பட்டுள்ளது.