டில்லி:
தலைநகர் டில்லியில் அகில இந்திய வானொலியில் பல ஆண்டுகளாக ஒலிபரப்பப் பட்டு வந்த வந்த தமிழ் செய்தி ரத்து செய்யப்பட்டதற்கு கம்யூனிஸ்டு உறுப்பினர் டி.ராஜா கடும் கண்டனம் தெரிவித்தார். மீண்டும் தமிழ் செய்தி ஒளிபரப்ப வேண்டும் என்று வலியுறுத்தினார்.
பாராளுமன்ற மாநிலங்களவையில் ஜீரோ அவர் நேரத்தின்போது பேசிய மாநிலங்களவை கம்யூனிஸ்டு உறுப்பினர் டி.ராஜா, டெல்லியில் உள்ள அகில இந்திய வானொலி (ஏ.ஐ.ஆர்) தலைமையகத்தில் உள்ள மத்திய தமிழ் செய்தி பிரிவு மீண்டும் செயல்பட வேண்டும் என்றும், நாட்டின் மிகவும் பழமையான மற்றும் சிறந்த கிளாசிக்கல் மொழியான தமிழ் மொழி புறக்கணிக்கப்படுவது வேதனையானது.
தமிழ் மொழியை 8 கோடி மக்கள் பேசி வருகின்றனர் என்றும், அனைத்து தென்னிந்திய மாநிலங்களிலும் பேசும் தமிழ்மொழி செய்தி பிரிவை டில்லி ஆல்இந்தியா ரேடியோ மூடுவது, தமிழ் மொழியின் பெருமையை குறைக்கும் நிகழ்வு, அகில இந்திய வானொலி டில்லி நிலையத்தில் தமிழ் பிரிவை ஏற்படுத்த வேண்டும் கோரிக்கை விடுத்தார்.
தமிழில் உள்ள தேசிய செய்தி புல்லட்டின் பிரிவை சென்னையில் உள்ள ஒரு பிராந்திய செய்தி புல்லட்டின் பிரிவுக்கு மாற்றிய பின்னர், ஏ.ஐ.ஆரில் உள்ள தமிழ் செய்தி பிரிவுகளின் எண்ணிக்கை நான்கில் இருந்து மூன்றாக குறைக்கப்பட்டது என்று அவர் கூறினார்.
“டெல்லியின் மத்திய தமிழ் செய்தி பிரிவு உடனடியாக மீட்கப்பட வேண்டும் என்று நான் அரசாங்கத்திடம் கேட்டுக்கொள்கிறேன்” என்று ராஜா கூறினார்.