சிவகங்கை:
உச்சநீதிமன்ற தடையை மீறி, சிவகங்கை அருகே ஜல்லிக்கட்டு போட்டி நடத்த முயன்ற 15 பேரை காவல்துறையினர் கைது செய்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சிவகங்கை அருகே சக்கந்தி கிராமத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. போட்டியில் கலந்துகொள்வதற்காக, மாடுகளுடன் 15 பேர் வந்தார்கள்.

ஜல்லிக்கட்டு நடத்த உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ள நிலையில், இப்படி ஓர் முயற்சி நடப்பது காவல்துறையினருக்கு தெரியவரவே, உடனடியாக அக் கிராமத்துக்கு சென்று 15 பேரை கைது செய்தனர். அவர்கள் கொண்டு வந்திருந்த மாடுகளையும் பறிமுதல் செய்தனர். ஆறு பைக்குளும் பறிமுதல் செய்யப்பட்டன.
கைது செய்யப்பட்ட ஜல்லிக்கட்டு வீரர்கள், “காவரி விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை கர்நாடக அரசு மதிப்பதே இல்லை. ஆனால் அதே உச்ச நீதிமன்றம் உத்தரிவிட்டது என்பதற்காக தமிழர்களின் பாரம்பரிய விளையாடாட்டான ஜல்லிக்கட்டை நடத்தவிடாமல் தமிழக போலீசார் தடுக்கிறார்களே” என்று குமுறினர்.
Patrikai.com official YouTube Channel