தமிழக சட்டமன்ற தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில் ஆட்சியில் பங்கு அதிகாரத்திலும் பங்கு என்று காங்கிரஸ் நிர்வாகிகள் சிலர் பேசிவருவதை அடுத்து திமுக – காங்கிரஸ் கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து அகில இந்திய காங்கிரஸ் கட்சி பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால் இன்று சென்னை வந்துள்ளார்.

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு ஆலோசனை நடத்திய அவர் அதன்பின் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் கலந்து கொண்டு, “திமுக கூட்டணியில் தான் காங்கிரஸ் உள்ளது 2ம் கட்ட தலைவர்களின் கருத்து கட்சியின் கருத்தல்ல” என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

அதேவேளையில், கூட்டணி குறித்து பொதுவெளியில் பேசினால் கட்சித் தலைமை நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி காங்கிரஸ் மாவட்ட தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
[youtube-feed feed=1]