மும்பை: ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லைஇல்லை ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி காந்த தாஸ் அறிவித்து உள்ளார். தொடர்ந்து 4ஆவது முறையாக ரெப்ப வட்டி விகிதம் மாற்றமில்லாமல் இருப்பது பயனர்களிடையே நிம்மதியை ஏற்படுத்தி உள்ளது.
ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்ததாஸ் தலைமையில் ரிசவ் வங்கி ஆளுநர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், இந்தியாவில் உள்ள வங்கிகளின் கையிருப்பில் போதிய அளவு பணம் மற்றும், வங்கிகள் ரிசர்வ் வங்கிக்கு (Reserve Bank of India) அளிக்க வேண்டிய வட்டி விகிதம் நாட்டின் பொருளாதார சூழ்நிலை உட்பட பல காரணிகள் குறித்து ரிசர்வ் வங்கியின் நிதிக்கொள்கை கமிட்டியின் (Monetary Policy Committee) வல்லுனர்கள் ஆய்வு செய்து முடிவெடுத்து ஆர்பிஐ-க்கு பரிந்துரை செய்வார்கள். இதுகுறித்து ரிசர்வ் வங்கி ஆளுநர் நாட்டு மக்களுக்கு தெரிவிப்பார்.
அதனப்டி, இன்று ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, “வளர்ந்து வரும் மேக்ரோ பொருளாதாரம் மற்றும் நிதி முன்னேற்றம் ஆகியவற்றின் விரிவான மதிப்பீட்டிற்குப் பிறகு, ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கைக் குழு, ரெப்போ வட்டி விகிதத்தை 6.5 சதவிகிதமாக நீடிக்க ஏகமனதாக முடிவு செய்தது” என்றார்.
ரெப்போ வட்டி விகிதம் 6.5 சதவிகிதமாக நீடிக்கும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. தொடர்ந்து நான்காவது முறையாக ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் மேற்கொள்ளவில்லை என்பது வங்கிகளில் கடன் வாங்கியோர்களுக்கு நிம்மதியை கொடுத்துள்ளது.
மே 2022 முதல் 250 அடிப்படைப் புள்ளிகள் வரை தொடர்ந்து ஆறு விகித உயர்வுகளுக்குப் பிறகு ஏப்ரலில் விகித அதிகரிப்பு சுழற்சி இடைநிறுத்தப்பட்டது. இன்று (வெள்ளியன்று) இருமாத நாணயக் கொள்கையை அறிவித்த ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ், நாணயக் கொள்கைக் குழு (எம்பிசி) ஒருமனதாக ரெப்போவை வைத்திருக்க முடிவு செய்ததாகக் கூறினார். 6.5 சதவீதத்தில் மாற்றம் இல்லை என்றார்.
நிதி பற்றாக்குறை ஏற்படும் போது, மத்திய வங்கியான ரிசர்வ் வங்கி பிற வங்கிகளுக்கு குறிப்பிட்ட வட்டி வகிதத்தில் கடன் அளிக்கும். அதன் பெயர்தான் ரெப்போ வட்டி ஆகும். பணவீக்கத்தின்போது, கடன் வாங்குவதை தவிர்க்கும் வகையில் ரெப்போ வட்டியை மத்திய வங்கி உயர்த்தும். இதன் மூலம், பொருளாதாரத்தில் பண புழக்கம் குறைக்கப்பட்டு, பண வீக்கத்தை குறைக்க உதவும் என்பது குறிப்பிடத்தக்கது.