சென்னை: ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்தி காந்ததாஸ் திடீர் நெஞ்சுவலி காரணமாக சென்னை ஆயிரம் விளக்கு அப்போலோ மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ரிசர்வ் வங்கியின் கவர்னர் சக்திகாந்த தாஸ் இன்று காலை (செவ்வாய்க்கிழமை) சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் தாஸ் கண்காணிப்பில் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் அவரது உடல்நிலை அல்லது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதற்கான காரணம் பற்றிய கூடுதல் விவரங்களை வழங்கவில்லை. மருத்துவமனை தரப்பில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை.
சக்திகாந்த தாசின் உடல்நிலை குறித்த நிலைமை கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், மத்திய வங்கியின் செய்தித் தொடர்பாளர் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார். அதில், ‘அசிடிட்டி’ காரணமாக தாஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்றும், ‘கவலைப் பட வேண்டிய காரணம்’ இல்லை என்றும் கூறினார். அவர் கண்காணிக்கப்படுகிறார், விரைவில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.