March
டில்லி:
மார்ச்-31ந்தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று வங்கிகள் செயல்படும் என ரிசர்வ் வங்கி அறிவித்து உள்ளது.
இந்த நிதி ஆண்டின் கடைசிநாளான மார்ச்31ந்தேதி. அன்று நிதி பரிவர்த்தனைகள், வங்கி பரிவர்த்தனைகள் நடைபெறும் என்பதால், அன்றைய தினம் அனைத்து வங்கிகளும் செயல்பட ரிசர்வ் வங்கி அறிவுறுத்தி உள்ளது.
நடப்பு நிதியாண்டின் கடைசி நாளன்று, நாட்டில் உள்ள அனைத்து அரசு, பொதுத்துறை மற்றும் தனியார் துறை நிறுவனங்கள், தங்களது வரவு செலவுகளை தாக்கல் செய்து வேண்டியது இருக்கும் என்பதால், வரும் 30 மற்றும் 31 ந்தேதி ஆகிய இரண்டு நாட்கள் அனைத்து வங்கிகளும் வழக்கம்போல் செயல்பட வேண்டும் என ரிசர்வ் வங்கி அறிவித்து உள்ளது.
மார்ச் 30ஆம் தேதி இரவு 8 மணி வரையிலும், மார்ச் 31ம் தேதி மாலை 6 மணி வரையிலும், கவுன்டர்களை திறந்து வைத்திருக்க வேண்டும் என்றும், சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய இரு நாட்களிலும், ஆன்லைன் பரிவர்த்தனைகளை மேற்கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து வங்கிகளையும், ரிசர்வ் வங்கி அறிவுறுத்தி உள்ளது.