சென்னை

ந்தியாவில் இருந்து ஆயத்த ஆடைகள் ஏற்றுமதி செய்யப்படுவது குறைந்துக் கொண்டே வருவதாக “தி இந்து” பத்திரிகை ஒரு அதிர்ச்சி தகவல் வெளியிட்டுள்ளது.

ஒவ்வொரு இந்திய நகரங்களிலும் தற்போது சாலை ஓரங்களில் விதவிதமான ஆயத்த ஆடைகள் விற்பனை செய்யப்படுவதை காண்கிறோம்.    அத்துடன் பல பெரிய மால்களிலும் கூட ஏற்றுமதி துணிகள் விற்பனை என்னும் பிரிவில் எக்கச்சகமான வெளிநாட்டுக்கு செல்ல வேண்டிய ஆயத்த ஆடைகள் விற்பனைக்கு உள்ளன.   இவைகள்  ஏழை மற்றும் நடுத்தர மக்களை குறிப்பாக இளைஞர்களை மிகவும் கவர்ந்து வருகிறது.

இவ்வளவு ஆடைகள் ஏற்றுமதி செய்யப்படாமல் தங்கி விட்டதா அல்லது இவைகள் குறைகள் உள்ள ஆடைகளா என பலருக்கும் கேள்வி பிறந்துள்ளது.    இந்தியாவின் ஏற்றுமதிகளில் முன்னணியில்   இருப்பது ஆடைகளே எனப் பலரும் சொல்லி வந்தனர்.   இந்தத் துறையில் 1.2 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு உள்ளது.   ஆனால் இவை எல்லாம் பழங்கதையா ஆகி வருகிறது.   இது குறித்து ஏற்றுமதி விவரங்களை அடிப்படையாகக் கொண்டு வெளிவந்த விவரங்கள் நாட்டில் நடைபெற்ற பலாத்காரம் மற்றும் ஏடிஎம் மில்  பணமின்மை  போன்ற செய்திகளால் அதிகம் கவனிக்கப்படவில்லை.

இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் சென்ற ஆண்டை விட துணிகள் ஏற்றுமதி 10.25% குரைந்துள்ளது.  அதே போல 2017-18 ஆண்டில் ஆடைகள் உற்பத்தி 10.4% குறைந்துள்ளது.     இது வரும் மாதங்களில் இன்னும் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.    பிப்ரவரி மாதத்துக்குப் பின் உள்ள விவரங்கள் இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை எனினும் அது குறைந்துக் கொண்டே வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கு முக்கிய காரணங்களாக பணமதிப்பிழப்பு நடவடிக்கையும் ஜிஎஸ்டியும் என சொல்லப்படுகிறது.   அவைகளை தவிர மற்றொரு காரணம் ரூபாய் மதிப்பு அதிகரிப்பும் ஆகும்.    டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு அதிகரித்ததால் ஒரு வெளிநாட்டு வணிகர் ரூ. 100 மதிப்பில் ஆன ஆடையை 6% அதிக விலை கொடுத்து வாங்க வேண்டியது உள்ளது.   அதே நேரத்தில் ஆடைகள் ஏற்றுமதியில் இந்தியாவுக்கு போட்டி நாடுகளான வங்க தேசம் மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளில் ஏற்றுமதியாளர்களுக்கு பழைய விலையிலேயே ஆடைகள் கிடைத்து வருகின்றன.

அதனால் வெளிநாட்டு வர்த்தகர்கள் இத்தகைய நாடுகளில் இருந்து வாங்குவதையே விரும்புகின்றனர்.   இந்த இரு நாடுகளிலும் குறைந்த ஊதியத்தில் தொழிலாளர்கள் கிடைத்து வருகின்றனர்.   அத்துடன் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இத்தகைய வளர்ந்து வரும் நாடுகளின் ஆடைகளுக்கு அரசு ஊக்கம் அளித்து வருவது குறிப்பிடத் தக்கது.   மொத்தத்தில் இந்தியாவின் ஆடை ஏற்றுமதிக்கு இதுவும் ஒரு மாபெரும் அச்சுறுத்டல் எனவே சொல்லலாம்.

அத்துடன் ஏற்கனவே மிக மெல்லிய லாபமே உள்ளதாக கூறப்படும் ஆடைகள் ஏற்றுமதித் துறையில்  ஊதிய உயர்வு மேலும் இழப்பை அளித்துள்ளது.   இதனால் பல தொழிற்சாலைகள் ஊதியம் அளிக்க முடியாமல்  பலரை பணி நீக்கம் செய்துள்ளது.   இந்த ஏற்றுமதித் துறை நலிவடந்து வருவதற்கு தலைமை நிதி ஆலோசகர், “போக்குவரத்து, ஊழியர் சட்டங்கள், வரிக் கொள்கைகள் ஆகியவை இந்த தொழிலை மிகவும் பாதித்து வருகிறது.   இதனால் இந்தத் துறையில் உள்ள மற்ற நாடுகளுடன் இந்தியா போட்டியிட முடியவில்லை”  எனக் கூறி உள்ளார்.

இதற்கு ஒரு தீர்வாக ஏற்றுமதியாளர்கள் சங்கம், “இந்த ஆடைகள் ஏற்றுமதி அடியோடு அழியாமல் காக்க வேண்டும் எனில் அரசு சில மாறுதல்களை கொண்டு வர வேண்டும்.   வரி விதிப்புக் கொள்கைகளை மாற்றி அமைக்க வேண்டும்.   போக்குவரத்துக்கான ஜி எஸ் டி யில் இருந்து ஏற்றுமதி ஆடைகளுக்கு விலக்கு அளிக்க வேண்டும்.  அத்துடன்  ஏற்றுமதி செய்யும் தொகைக்கு ஏற்ப ஊக்கத் தொகை வழங்கப்பட வேண்டும்.   அத்துடன் வெளிநாட்டின் புகழ் பெற்ற பிராண்டுகளின் போலிகள் இந்தியாவில் தயாரிக்கப்படுவதை தடுக்க வேண்டும்.”  என கூறி உள்ளது.

நன்றி : தி இந்து