டெல்லி: வட்டி விகிதங்களில் எந்த மாற்றமும் இல்லை என்றும், நாட்டின்  ஒட்டு மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி (ஜிடிபி)  10.5 சதவீதத்தை எட்டும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்  ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்ததாஸ் தெரிவித்துள்ளார்.

இன்று நடைபெற்ற ரிசர்வ் வங்கி கூட்டத்தைத் தொடர்ந்து  ரிசர்வ் வங்கியின் 2021- 22 ஆண்டுக்கான நிதி கொள்கையை வெளியிட்டு சக்தி காந்ததாஸ் காணொலியில் பேசினார்.

அப்போது, 4வது முறையக கடன்களுக்கான முக்கிய வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை. தற்போதைய நிலையில் நுகர்வோரின் நம்பிக்கை மதிப்பாய்வு செய்யப்பட்டு வருகிறது.

பொருளாதார வளர்ச்சியினை ஊக்குவிக்கும் வகையில், வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லை. இதனால் வழக்கம்போல ரெப்போ விகிதம் 4% ஆகவும், ரிவர்ஸ் ரெப்போ விகிதம் 3.35% ஆகவும் தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், 2021-22 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில், சுகாதாரம் மற்றும் உட்கட்டமைப்பு துறைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.

இதனால், 2021- 22ல் நாட்டின்  ஒட்டடு மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 10.5 சதவீதத்தை எட்டும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்

வங்கிகளின் குறுகிய கால கடனுக்கான வட்டி விகிதம் மாற்றமின்றி 4 சதவீதமாக நீடிக்கும். மேலும் விளிம்பு நிலை வசதி வீதம் மற்றும் வங்கி வீதம் 4.25% ஆக மாறாமல் உள்ளது. தலைகீழ் ரெப்போ விகிதம் 3.35% ஆக மாறாமல் உள்ளது என்றார்.

கொள்கை ரெப்போ விகிதங்களை 4% ஆக மாற்றாமல் இருக்க எம்.பி.சி (நாணயக் கொள்கைக் குழு) ஒருமனதாக வாக்களித்தது. சிபிஐ (நுகர்வோர் விலைக் குறியீடு) பணவீக்கத்தின் திட்டம் நடப்பு நிதியாண்டின் Q4 க்கு 5.2% ஆக திருத்தப்பட்டுள்ளது.

தொழில்துறை வளர்ச்சிக்கு தேவையான அனைத்து நடவடிக்கையும் ரிசர்வ் வங்கி எடுக்கும் என்றவர்,  தொழில்துறை வளர்ச்சிக்கு ஊக்கம் அளிக்க கடன்பெறும் குழலை தொடர்ந்து அளிக்க ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளதாக  தெரிவித்தார்.

தற்போதைய நிலையில் நுகர்வோரின் நம்பிக்கை மதிப்பாய்வு செய்யப்பட்டு வருகிறது. கொரோனா தடுப்பூசிகள் வருகையால் 2021-22 நிதியாண்டு ஆக்கப்பூர்மான நம்பிக்கையுடன் தொடங்கியுள்ளது. மேலும் நாட்டி ஒட்டுமொத்த வளர்ச்சி மேலோட்டமாக குறிப்பிடத்தக்க அளவில் மேம்பட்டுள்ளது.

2021-22 நிதியாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி 10.5% ஆக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. அதனைத்தொடர்ந்து 2020-ம் ஆண்டு நமது திறன்களையும் சகிப்புத்தன்மையையும் சோதித்தாலும், 2021 நமது வரலாற்றின் புத்தகத்தில் ஒரு புதிய பொருளாதார சகாப்தத்திற்கு களம் அமைக்கப்படும் என்று ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்தி காந்த தாஸ் தெரிவித்துள்ளார்.