டில்லி:

ரெப்போ வட்டி விகிதத்தில்  0.25 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளதாக ஆர்பிஐ தலைவர் சக்திகாந்த தாஸ் தெரிவித்து உள்ளார். வங்கிகளுக்கான குறுகிய கால கடன் வட்டி விகிதமா ரெப்போ 0.25  (கால் சதவீதம்)  குறைத்து ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

சக்திகாந்த தாஸ்

ஏற்கனவே கடந்த டிசம்பர் மாதம் முன்னாள் ரிசர்வ் வங்கி தலைவர் உர்ஜித் பட்டேல் தலைமை யில் நடைபெற்ற நிதிக்கொள்கை கூட்டத்தில் ரெப்போ வட்டி விகிதத்தில் எந்தவித மாற்றமும் இல்லை என அறிவிக்கப்பட்டிருந்தது.

அதைத்தொடர்ந்து புதிதாக நியமிக்கப்பட்ட ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ் பொறுப்பேற்ற பிறகு நடைபெற்ற முதல் நிதிக்கொள்கை கூட்டத்தில், ரெப்போ வட்டி விகிதம் கால் சதவிகிதம் குறைப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இதன காரணமாக வீடு, வாகன கடன்களுக்கான வட்டி விகிதம் குறைய வாய்ப்பு  ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ், வங்கிகளுக்கான குறுகிய கால கடன் வட்டி விகிதமான ரெப்போ விகிதம் 6.5 சதவீதத்தில் இருந்து 6.25 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.

2019 – 20-ஆம் நிதியாண்டில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம் 7 புள்ளி 4 சதவீதமாக இருக்கும் என எதிர்பார்ப்பதாகவும்,  பணவீக்க விகிதம் ஆண்டின் முதல் பாதியில் 3 புள்ளி 2 சதவீதத்தில் இருந்து 3 புள்ளி 4 சதவீதமாகவும், 3-வது காலாண்டில் 3 புள்ளி 9 சதவீதமாகவும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக கூறினபார்.

பிணையில்லா விவசாயக் கடன் வரம்பை ஒரு லட்சம் ரூபாயில் இருந்து 1 லட்சத்து 60 ஆயிரம் ரூபாயாக உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும்,  நகர கூட்டுறவு வங்கிகளை இணைக்கும் ஒருங்கிணைப்பு அமைப்பை ஏற்படுத்துவது குறித்து விரைவில் ஆலோசனை செய்து முடிவெடுக்கப்படும் என்றும் கூறினார்.