சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் காரணமாக, பள்ளி, கல்லூரிகளில் தற்காலிக கொரோனா சிகிச்சை மையங்கள், தனிமைப்படுத்துதல் மையங்கள் அமைக்கப்பட்டன. அவற்றை இடமாற்றம் செய்யுங்கள் என மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக தலைமைச் செயலாளர் சண்முகம் உத்தரவிட்டுள்ளார்.
தமிழக தலைமைச் செயலாளர் சண்முகம் கடந்த 2 நாட்களாக மாவட்ட ஆட்சியர்களுடன் பல்வேறு நிகழ்வுகள் குறித்து காணொளி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார். அப்போது 7ந்தேதி முதல் பொது போக்குவரத்து தொடங்குவதால், மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விரிவாக விவாதித்ததாக கூறப்பட்டது.
மேலும், தனிநபர் முகக்கவசம் அணிவது கட்டாயம் என்றும், போக்குவரத்தின்போதும் சமூக இடைவெளி உள்பட கொரோனா தடுப்பு வழிகாட்டுதல்களையும் தீவிரமாக கடைபிடிக்கும்படி அறிவுறுத்தி னார். அக்டோபர் மாதம் தொற்று தீவிரமடையும் என எதிர்பார்க்கப்படுவதால், கண்காணிப்புகளை அதிகப்படுத்தும் படியும் எச்சரிக்கை விடுத்தார்.
அதைத்தொடர்ந்து, மாவட்டஆட்சியர்களுக்கு தலைமைச்செயலாளர் கடிதம் அனுப்பினார்.
அந் கடிதத்தில் கூறியிருப்பதாவது,
கொரோனா வைரஸ் பரவலை தடுப்பு நடவடிக்கையில் ஒவ்வொரு மாவட்ட கலெக்டரும் தீவிரமாக பணியாற்ற வேண்டும், மக்களிடையே சுகாதாரம் சார்ந்த விழிப்புணர்வை மாவட்ட நிர்வாகம் ஏற்படுத்த வேண்டும். அதை என்பதை தன்னார்வலர்கள் மூலம் கண்காணிக்க வேண்டும் என்று தெரிவித்து உள்ளார்.
மேலும் கொரோனா தொற்று அதிகம் பரவும் வாய்ப்பு உள்ள இடங்களான மார்க் கெட், பஸ் நிலை யங்கள், வழிபாட்டு தலங்கள், வணிக நிறுவனங்கள், மீன் மார்க்கெட்டுகள், உணவகங்கள், மளிகை கடைகள் ஆகிய இடங்களில் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும்
தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கு வசூலிக்கப்படும் கட்டணங்களை மாவட்ட கலெக்டர்கள் உன்னிப்பாக கவனிக்க வேண்டும். அரசின் விதி முறைகளை பின்பற்றி கட்டணம் வசூலிக்கிறார்களா? அல்லது அதிகம் கேட்கிறார்களா? என்பதை கண்காணிக்க வேண்டும்.
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்தவும், சிகிச்சை அளிக்கவும் பல மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளில் உள்ள கட்டிடங்கள் சிகிச்சை மையங்களாக செயல்பட்டு வருகிறது. விரைவில் கல்வி நிலையங்கள் திறக்கப்பட உள்ளதால், அவைகளை விரைவில் இடம் மாற்றம் செய்ய வேண்டும்.
பொது மக்கள் தற்போது இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி உள்ளதால் மாவட்டங்களில் தேவை ஏற்படும் பட்சத்தில் அதிக அளவு கட்டுப்பாட்டு பகுதிகளை ஏற்படுத்தலாம்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.