கொழும்பு,

யானையின் தொண்டைக்குள்  சிக்கிய 15 கிலோ பாலிதீன் பைகள் அகற்றப்பட்டன.

இலங்கை தமன்கடுவ பிரதேசம், நெழும் மாவத்தை பகுதியில், யானை ஒன்று  உயிருக்கு போராடிக்கொண்டிருந்தது. அதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

கால்நடை மருத்துவர் சமீர கலிகு யானையின் உடல்நிலை குறித்து பரிசோதனை செய்தார். அப்போது யானை சில நாட்களாக சரியாக உண்ண முடியாமல் நோய்வாய் பட்டிருப்பது தெரிய வந்தது.

35வயதான இந்த யானையின் தொண்டையில் பாலிதின் பைகள் சிக்கியிருந்ததால், யானையால் உணவு உண்ண முடியாமல் கடும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளது பரிசோதனையில் தெரிய வந்தது.

தற்போது யானையின் தொண்டையில் இருந்து பாலிதின் பைகள் அகற்றப்பட்டு வருகிறது. யானையின் உயிரை காப்பாற்றுவதற்கு கால்நடை மருத்துவர்கள் போராடி வருகின்றனர்.