சென்னை: தமிழ்நாட்டில் உள்ள அனைத்து இந்துக் கோவில்களில் இருந்து ஷீரடி சாய்பாபா சிலைகளை அகற்ற உத்தரவிட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

சமீப காலமாக தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான இந்து கோவில்களில் வெள்ளை பளிங்கு கற்கலிலான சாய்பாபா சிலைகள் நிறுவப்படுகின்றன. இது ஆகம விதிகளுக்கு முரணானது என்ற குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளது.  ஏற்கனவே சாய்பாபாவின் காலடியில் நமது கடவுள் சிலைகளை வைத்தால், அதை ஏற்க முடியாது” என்று சங்கராச்சாரியாரின் ஆதரவாளர் சுவாமி நரேந்திர கிரி  கடுமையாக எதிர்ப்பு தெரிவித்திருந்தார்.  இவர் இந்து சமயப் பார்ப்பனர்கள் மற்றும் துறவிகளின் அமைப்பான அகில பாரதிய அகாரா பரிஷத்தின் தலைவராக பணியாற்றியவர்.

மேலும், சாய்பாபா குறித்து பல்வேறு தகவல்கள் பரவி வருகின்றன. அவர் ஒரு இஸ்லாமிய என்றும் கூறப்படுகிறது.  மேலும் சாய்பா என அழைக்கப்படுபவர் எங்பபோதாவது அல்-ஃபாத்திஹாவை உச்சரிப்பார், மேலும் அவர் ஃபக்கீர்களை ஃபத்யாவை உச்சரிக்கச் சொன்னதாகவும்  அவரது வரலாற்று நூல் தெரிவிக்கிறது.  இதனால் அவர் இஸ்லாமியர் என்ற கூற்று உறுதியாகி உள்ளது. மேலும்,  அவர் கூறிய அல்-ஃபாத்திஹா என்பது குர்ஆனின் தொடக்க அத்தியாயத்தின் ஓதுதல் மற்றும் ‘அடிக்கடி திரும்பத் திரும்பச் சொல்லப்படும் ஏழு வசனங்கள். இந்த வசனத்தை சாயிபாபா  தினமும் சொல்லிக் கொண்டிருந்தார், நம்பிக்கை இல்லாத ஹிந்துக்களை சபித்தார் என்றும் குற்றச்சாட்டுக்கள் கூறப்படுகின்றன. அதுபோல,  பலிபீடத்தில் ஆடு கொல்லப்படும் போது, ​​இறைச்சி ஹலால் அல்லது சரியான முறையில் சுத்திகரிக்கப்படுவதை உறுதி செய்வதற்காக சாய்பாபா எப்போதாவது தக்யா எனப்படும் சிறப்பு முஸ்லீம் பலி சடங்குகளை மேற்கொள்வார். அவர் பிஸ்மில்லாஹ், அல்லாஹு அக்பர் (அல்லாஹ்வின் பெயரால், அல்லாஹ் மிகப் பெரியவன்) என்ற கல்மாவை ஓதிக் கொண்டிருந்தார் என்றும் கூறப்படுகிறது. இதுதொடர்பான சர்ச்சைகள் இன்னும் முடிவுக்கு வரவில்லை.

இந்த நிலையில், தமிழ்நாட்டில் உள்ள   அனைத்து இந்துக் கோவில்களில் இருந்தும் ஷீரடி சாய்பாபா சிலைகளை அகற்ற வேண்டும், அவர்மீது,  துறவியின் மத அடையாளம் தெரியவில்லை என்றும், இந்து கோவில்களில் அவரது வெள்ளை பளிங்கு சிலைகளை நிறுவுவது ஆகமத்திற்கு எதிரானது என்றும் மதராஸ் உயர்நீதிமன்றத்தில் ஒரு பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.