
கிட்டத்தட்ட ரெமோ படத்தின் ரிலீசுக்கு இன்னும் ஒரு வாரம் தான் இருக்கிறது. படத்தின் புரமோஷன்களில் முழுவீச்சாக 24AM Studios நிறுவனத்தினர் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். இதன் ஒரு பாகமாகதான் சென்னை நகர் முழுவதும் முக்கிய திரையரங்கம் மற்றும் மால்களில் மன்மதன் சிலைகளை வைப்பது.
8 அடி உயரத்தில் மொத்தம் 100 சிலைகளை வடிவமைத்திருக்கிறார் கலை இயக்குநர் முத்துராஜ். 100க்கும் மேற்பட்ட ஆட்களை வைத்து இரவு பகலாக இந்த சிலைகளை கச்சிதமாக உருவாக்கி கொடுத்திருக்கிறார் முத்துராஜ். பொதுவாக இந்த மாதிரி புரமோஷன்களில் ஹிரோவின் முகம்தான் அதிகம் பிரபலபடுத்தப்படும் ஆனால் இங்க விஷயமே வேறு, மன்மதன் எப்படி கற்பனை உருவமாக இருக்கிறதோ அதே உருவத்தைதான் சிலையாக வடித்திருக்கிறார்கள்.
செல்ஃபி பிரியர்கள் முதல் குழந்தைகள் வரை இந்த சிலை கவர்ந்து இழுப்பதால் அனைவரும் இந்த சிலையுடன் போட்டோ எடுத்துக் கொள்கிறார்கள். விஜயா போரம் மாலுக்கு சென்ற ரசூல் பூக்குட்டி இந்த மன்மதனுடன் செல்பியும் எடுத்துள்ளார் எடுத்துட்டு வந்துள்ளார். இவரை போல் செலிபிரட்டியிலிருந்து சாதாரணமானவர்கள் வரை செல்பி எடுத்து மகிழ்கின்றனர்.
Patrikai.com official YouTube Channel