
‘ரஜினி முருகன்’ படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயன் நடிப்பில் நேற்று வெளியான படம் ‘ரெமோ’. அறிமுக இயக்குநர் பாக்யராஜ் கண்ணன் இப்படத்தை இயக்கியிருந்தார். ‘ரஜினி முருகன்’-க்கு பிறகு இதிலும் சிவாவுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் டூயட் பாடி ஆடியுள்ளார்.
’24 ஏ.எம்.ஸ்டுடியோஸ்’ சார்பில் ஆர்.டி.ராஜா பிரம்மாண்டமாக தயாரித்து, ப்ரொமோஷனிலும் ஓவர் ஹைப் ஏத்தி விட்டார்.ஆனால், படம் கலவையான விமர்சனங்களையே பெற்று வருகிறது. இருந்தும் லேடி நர்ஸ் கெட்டப்பில் சிவா அசத்தியுள்ள இப்படம் முதல் நாளிலையே கல்லாவை பரபரவென நிரப்பியுள்ளது. தமிழ்நாட்டில் மட்டும் 8 கோடி வசூல் செய்துள்ளான் ‘ரெமோ’. இவ்வருடம் ரிலீஸான ‘கபாலி, தெறி’யைத் தொடர்ந்து முதல் நாளில் அதிக வசூல் குவித்த பெருமை ‘ரெமோ’வையே சேருமாம்.
Patrikai.com official YouTube Channel