ண்டன்

ரெம்டெசிவிர் மருந்து கொரோனா நோயாளியை முற்றிலும் குணப்படுத்தி உள்ளதாக இங்கிலாந்தில் நடந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது.

ஹெபாடிடிஸ் சி, எபோலா ஆகிய நோய்களைக் குணப்படுத்த ரெம்டிசிவிர் மருந்து உருவாக்கப்பட்டது,.   கொரோனாவால் பாதிப்பு அடைந்தோரைக் குணப்படுத்த இந்த மருந்தைப் பயன்படுத்தலாம் என சில மருத்துவர்கள் தெரிவித்தனர்.   ஆனால் கடந்த அக்டோபர் மாதம் இந்த மருந்து கொரோனா மரணத்தைக் கட்டுப்படுத்தாது என உலக சுகாதார அமைப்பு அறிவித்தது.

இங்கிலாந்தில் உள்ள ஒரு 31 வயதான நோயாளி அரிய மரபணுக் கோளாறு காரணமாக நோய் எதிர்ப்புச் சக்தியை உருவாக்க முடியாத நிலையில் உள்ளவர் ஆவார். இவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது.  இவருக்கு இங்கிலாந்தில் உள்ள கேம்பிரிட்ஜ் பலகலைக்கழக ஆய்வாளர்கள் ரெமெடிசிவிர் மருந்தைச் செலுத்தினார்.   அவருக்கு கொரோனா குணமானது.

ஆயினும் ஒரு வாரத்துக்குள் அவர் மீண்டும் கொரோனா தாக்குதலால் பாதிப்பு அடைந்தார்.  இதையொட்டி அதிர்ச்சி அடைந்த ஆய்வாளர்கள் அவருக்கு ரெம்டெசிவிர் மருந்தையே மீண்டும் அளித்தனர்.   அவர் இந்த மருந்தால் முற்றிலும் குணம் அடைந்துள்ளார்.  ஆகவே கொரோனாவுக்கு எதிராக ரெம்டெசிவிர் மருந்து செயல்பட்டு முற்றிலும் குணம் அளிப்பதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.