அமெரிக்க பொழுதுபோக்கு நிறுவனமான வால்ட் டிஸ்னி அண்ட் கோ தனது தொலைகாட்சி நிறுவனங்களான ஸ்டார் டிவி மற்றும் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் ஆகியவற்றின் இந்திய ஒளிபரப்பு உரிமையை ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு விற்க உள்ளது இறுதி செய்யப்பட்டுள்ளது.

83,000 கோடி ரூபாய் மதிப்புள்ள இந்த நிறுவனத்தை வாங்க சன் நெட்ஒர்க் மற்றும் அதானி குழுமத்துடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
இந்த நிலையில் வியாகாம் மற்றும் ஜியோ சினிமா ஆகிய சேனல்களை நடத்திவரும் ரிலையன்ஸ் குழுமம் டிஸ்னி ஹாட்ஸ்டாரை வாங்கவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
Patrikai.com official YouTube Channel