மும்பை: ஒரே தரவுதளத்தில் 100 சேவைகளைத் தரக்கூடிய வகையிலான ஒரு ‘சூப்பர் செயலியை’, ரிலையன்ஸ் ஜியோ அறிமுகம் செய்யவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது உலகின் மிகப்பெரிய ஆன்லைன் – டு – ஆஃப்லைன் புதிய இ-காமர்ஸ் தரவுதளமாக திகழும் என்றும் கூறப்படுகிறது.

தற்போது, நாடெங்கிலும் ஜியோ நெட்வொர்க் சேவையை பயன்படுத்துவோர் எண்ணிக்கை 300 மில்லியன் என்பதிலிருந்து அந்த நெட்வொர்க்கின் வளர்ச்சியை தெரிந்து கொள்ளலாம்.

இந்த சமயத்தில், இப்படியான சூப்பர் செயலியை ரிலையன்ஸ் ஜியோ அறிமுகம் செய்வதன் மூலம், இந்தியாவின் விசாட் -ஐ உருவாக்க முடியும் என நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.

ஏனெனில், இந்த விஷயத்தில், ஸ்னாப்டீல், பேடிஎம், ஃப்ரீசார்ஜ், ஃப்லிப்கார்ட் மற்றும் ஹைக் போன்றவை ஏற்கனவே தோல்வியடைந்துள்ளதால், இந்தக் கருத்தை தெரிவிக்கின்றனர் நிபுணர்கள்.