டில்லி:

டிராய் மே 2018  முதலே விமானத்தின் இன்டர்நெட் சேவையும், செல்போன் பேச இந்திய தொலைத்தொடர்பு துறைக்கு வழங்கியிருக்கிறது என்றாலும் டிசம்பரில்தான் விதிகளை அறிமுகம் செய்தது,

இந்தியா மற்றும் தென்கொரியாவில் மட்டுமே விமானத்தின் இன்டர்நெட் சேவை இன்னமும் அறிமுகப்படுத்த வில்லை என்பது குறிப்பிடத்தக்கது

ஏற்கனவே ஏர்டெல் மற்றும் பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு 10 வருடத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அந்நிறுவனங்களும் விமானத்தில் இன்டர்நெட் கொடுக்கும் பணியை செயல்பாட்டிற்கு கொண்டுவர பணியாற்றிவருவதாக கூறியிருக்கின்றனர்

இவ்வரிசையில் ஜியோ நிறுவனமும் விமான இன்டர்நெட் வழங்க இந்திய தொலைத்தொடர்பு துறையை அணுகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன

இந்தியா முழுதும்  ஏற்கனவே இணையப் புரட்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் விமானத்திலும் இணையச்சேவை வழங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

-செல்வமுரளி