தற்போதைய தமிழக முதல்வர் திரைத்துறையில் நெம். 1 ஹீரோயினாக வலம் வந்தவர் என்பது அனைவருக்கும் தெரியும். அப்படி அவர் பீக்கில் இருந்து போது, 1973ம் வருடம் முத்துராமனுடன் இணைந்த சூரிய காந்தி என்ற படத்தில் நடித்தார்.
150 நாட்களுக்கு மேல் ஓடி அமோக வெற்றி பெற்ற படம் இது. இந்த படத்தை தற்போது நவீன வடிவில் டிஜிட்டல் மற்றும் சினிமாஸ் கோப்பாக மாற்றி வெளியிடுகிறார்கள்.
“43 வருடங்களுக்கு முன் வந்த படமாக இருந்தாலும், சூரியகாந்தி படத்தின் கதைக்களம் எந்த கால கட்டத்திற்கும் பொருத்தமானதாக இருப்பதால் இன்றைய தலை முறையினரும் ரசிக்க கூடிய படமாக இது இருக்கும்.
கணவனை விட மனைவி அதிகம் சம்பாதிக்கிறார் என்கிற தாழ்வு மனப்பான்மை பிடித்து ஆட்டும் ஈகோ தான் கதைக்களம்.
சோ, மனோரமா , மௌலி, காத்தாடிராமமூர்த்தி MRR.வாசு போன்றோர் நடித்திருக்கிறார்கள். இந்த படத்தில் ஜெயலிலதா இரண்டு பாடல்களை சொந்தக் குரலில் பாடி இருந்தார். “ ஓ மேரோ தில்ரூபா “ என்ற பாடலும்
“ நானென்றால் அது நீயும் நானும்” என்ற பாடலும் ஆகும்.
அத்துடன் கண்ணதாசன் எழுதி நடித்து டி.எம்.எஸ் பாடிய “ பரமசிவன் கழுத்திலிருந்து பாம்பு கேட்டது கருடா சௌக்கியமா ? என்ற புகழ்பெற்ற பாடலும் இந்த படத்தில்தான் இடம்பெற்றுள்ளது” என்று இந்த படத்தை வெளியிடும் ஏ.பி. பிலிம்ஸ் கஜலட்சுமி தெரிவித்தார்.