சென்னை

மிழகத்தில் அமலில் உள்ள முழு ஊரடங்கை படிப்படியாகத் தளர்த்தலாம் என நிபுணர்கள் பரிந்துரை செய்துள்ளனர்.

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தமிழகத்தில் கடந்த மே மாதம் 10 ஆம் தேதி முதல் முழு ஊரடங்கு அமலில் உள்ளது.  சென்ற 24 ஆம் தேதி அன்று தளவுகளுடன் கூடிய முழு ஊரடங்கு அமலில் இருந்த நிலையில் அதன் பிறகு தளர்வுகள் அற்ற ஊரடங்கு அமலானது.  வரும் 7 ஆம் தேதி தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கு அமலில் உள்ளது.

இந்த ஊரடங்கு நீட்டிக்கப்பட மாட்டாது எனத் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.  தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் இந்த ஊரடங்கு நீட்டிப்பு அல்லது ரத்து குறித்து மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.    இந்த ஆலோசனை கூட்டத்தில் நிபுணர்கள் தெரிவித்துள்ள ஆலோசனைகளின்படி ஒரு சில தளர்வுகள் அறிவிக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.

நிபுணர்கள், “தற்போது சென்னை உள்ளிட்ட பெரிய நகரங்களில் தொற்று குறைந்த போதிலும் மேற்கு தமிழகத்தில் பாதிப்பு அதிகரித்து வருகிறது.  எனவே குறைந்த பாதிப்பு விகிதம் மற்றும் அதிக காலியான மருத்துவமனைகள் கொண்ட மாவட்டங்களில் ஊரடங்கு அவசியம் இல்லை.  தற்போது மாவட்டங்களின் இடையே வெவ்வேறு அளவில் பாதிப்பு இருப்பதால் பாதிப்பின் அடிப்படையில் படிப்படியாக ஊரடங்கில் தளர்வு அறிவிக்க வேண்டும்” எனப் பரிந்துரை அளித்துள்ளனர்.