கொழும்பு:
லங்கை முழுவதும் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி ஏற்பட்டதைத் தொடர்ந்து, அதிபர் கோத்தபாய ராஜபக்சே அரசுக்கு எதிராக பொதுமக்கள் கொந்தளித்துள்ளனர். அதிபர், பிரதமர் பதவிகளில் இருந்து ராஜபக்சே சகோதரர்கள் உடனடியாக பதவி விலகக் கோரி கடந்த ஒரு மாதமாக பொதுமக்கள் அமைதியான முறையில் போராட்டம் நடத்தி வந்தனர்.

வன்முறையை கட்டுக்குள் கொண்டு வர நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இலங்கை முழுவதும் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து இலங்கை அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், காலை 7 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை தளர்வு அளிக்கப்பட்டுள்ளது என்றும்,
பிற்பகல் 2 மணி முதல் நாளை காலை 6 மணி வரை ஊரடங்கு மீண்டும் அமலாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.