கொழும்பு:
லங்கையின் புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்க நியமிக்கப்படுவார் என தகவல் வெளியாகியுள்ளது.

இலங்கை மக்களுக்கு உரையாற்றிய அதிபர் கோத்தபய ராஜபக்ச, இலங்கையில் ஒரு வாரத்திற்குள் புதிய பிரதமர் மற்றும் அமைச்சரவை பொறுப்பேற்கும் என்றும் கூறினார். அப்போது, புதிய இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதற்காக கடந்த சில நாட்களில் தீவிர முயற்சி மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். மேலும், நாடாளுமன்றத்திற்கு அதிக அதிகாரங்களை வழங்கும் 19-வது சட்ட திருத்தம் மேற்கொள்ளப்படும் எனவும் உறுதியளித்தார்.

இந்நிலையில், இலங்கையின் முன்னாள் பிரதமரும், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க, நேற்று அதிபர் கோத்தபய ராஜபக்சவுடன் ஆலோசனை நடத்தினார். இந்நிலையில், இலங்கையின் புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்க நியமிக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.