1china-viyatnam1
சீனாவுக்கு தனது முதல் பயணமாக வருகை தந்திருக்கும் வியட்நாம் பிரதமர் நிகுயன் சுவாக் ஃபுக்குக்கு பீஜிங்கில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இருநாட்டு தலைவர்களுக்கு இடையே நடந்த பேச்சுவார்த்தை மிகுந்த பயனுள்ளதாக அமைந்ததாகவும், ஏற்கனவே நல்ல நண்பர்களாக இருக்கும் இவ்விரு நாடுகளுக்கும் இருந்த உறவு வலுப்பட்டுள்ளதாகவும் இரு நாட்டுத் தலைவர்களும் கருத்து தெரிவித்துள்ளனர்.
கடந்தவாரம் தெற்கு சீன கடற்பகுதியின் எல்லைகள் குறித்து நிலவிவந்த சிறு சிறு சர்ச்சைகள் குறித்த விவாதம் லாவோஸ் நாட்டின் தலைநகர் வியண்டைனில் நடந்தது.   கடந்த மூன்று மாதங்களில் நடந்த முன்றாவது பேச்சுவார்த்தை இதுவாகும்.  அப்பகுதியின் கடற்பகுதி சரியாகப் பேணப்படுவதில்லையெனவும், அது கழிவுகள் கொட்டப்படும் இடமாக மாறிவருவதாகவும் இந்தப்பிரச்சனை நாடுகளின் இறையாண்மையையும் எல்லைப்புற உரிமைகளையும் பாதிக்காத வகையில் தீர்க்கப்படவேண்டும் என்று தலைவர்கள் கருத்து தெரிவித்தனர்.
இதனிடையே சீனாவுக்கும் வியட்னாமுக்கும் பல வர்த்தக உடன்பாடுகளும் கையெழுத்தாகியிருக்கிறது. தெற்காசியாவில் சீனாவுடன் அதிகப்படியான வர்த்தக உறவு பேணும் நாடுகளில் மலேசியாவே முன்னனியில் இருந்து வந்தது. ஆனால் இப்போது நடந்து முடிந்துள்ள உடன்பாடுகள் மூலம் மலேசியாவிடமிருந்து முதல் இடத்தை வியட்நாம் தட்டிப்பறித்திருப்பதாகக் கூறப்படுகிறது.