ஆன்லைன் மூலம் மணல் விற்பனை செய்வதை முறைப்படுத்த வேண்டும் என தமிழக மணல் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர்.
தமிழகத்தில் ஒருநாளுக்கு சுமார் 20,000 மணல் மூட்டைகள் தேவை இருக்கும் நிலையில்,.லாரி ஒன்றுக்கு ஆயிரம் மூட்டைகள் மட்டுமே வழங்கப்படுகின்றன. ஆன்லைனில் மணல் வாங்குவதற்காக கிட்டத்தட்ட 87,000 வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், குறைந்த அளவில் மட்டுமே மணல் மூட்டைகள் வழங்கப்படுவதால், தேவையை பூர்த்தி செய்வதில் தாமதம் ஏற்படுகிறது என்று லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
மலேசியாவிலிருந்ந்து இறக்குமதி செய்யப்பட்ட மணல் ஒரு டன்னுக்கு ரூ. 2,500-க்கு விற்கப்படுகிறது. இதுவே மூன்று யூனிட் அளவிலான மணலுக்கு ரூ. 35,000 வரை வசூலிக்கப்படுகிறது. அண்டை மாநிலங்களான ஆந்திரா மற்றும் கர்நாடகாவில் விற்கப்படும் இறக்குமதி செய்யப்பட்ட மணலுடன், தமிழக நிலையை ஒப்பிடும்போது, ஆற்று மணலின் விலை உயர்வுடன் இருப்பதாகவும், அங்கு ஒரு டன் மணல் ரூ. 1,500 மற்றும் ரூ. 1,600க்கு விற்கப்படுகிறது என்றும் லாரி உரிமையாளர் சங்கத்தினர் வேதனை தெரிவித்துள்ளனர்.
இறக்குமதி செய்யப்படும் மணலை கோவை, சேலம் போன்ற மாவட்டங்களுக்கு கொண்டுச்செல்ல, அரசு விலைக்குறைப்பில் ஈடுபட வேண்டும் என்றும், இறக்குமதி செய்யப்பட்ட மணலை ஆண்டை மாநிலங்களிருந்தும் தேவை ஏற்பட்டால் கொண்டுவர அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் தெரிவித்தனர்.
இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த லாரி உரிமையாளர்கள் சங்க கூட்டமைப்பின் தலைவர் எஸ்.யுவராஜ், மாநிலம் முழுவதும் தினமும் சுமார் 10,000 மூட்டை எம்-மணல் வழங்கப்படுகிறது. மாநிலம் முழுவதும் சுமார் 1,400 எம்-மணல் அலகுகள் உள்ளன. சிலவற்றில் மட்டுமே பொதுப்பணித் துறை தரச்சான்று ஒப்புதல் அளித்துள்ளது. தரத்தை உறுதிப்படுத்த மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். எம்-மணலை ஆன்லைன் மூலம் விற்பனை செய்யவும் அரசு முயற்சிக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.