சென்னை: தமிழக அரசின் பதிவுத் துறை ஐ.ஜியாக உள்ள சிவன்அருள் மனைவி கழுத்தறுக்கப்பட்ட நிலையில் இறந்து கிடந்தது பல்வேறு யூகங்களை ஏற்படுத்தி உள்ளது. அவர் தற்கொலை செய்து கொண்டிருப்பதாக தகவல்கள் கூறப்படும் நிலையில், அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகமும் எழுப்பப்பட்டு வருகிறது.
பத்திர பதிவுத்துறை ஐஜி சிவன் அருள் ஐஏஎஸ். இவரது மனைவி சுமதி ( வயது 53). இவர்கள் சென்னை ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகின்றனர். இந்த தம்பதிகளுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். மகள் டாக்டராக உள்ளார். மகன் கல்லூரி மாணவர்.
சம்பவத்தன்று இ சிவன் அருள் வீட்டிலிருந்து வேலைக்குக் கிளம்பிச் சென்ற நிலையில், மகன், மகளும் வெளியே சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில்தான் சுமதி கழுத்தறுக்கப்பட்ட நிலையில் இறந்து கிடந்தார். அவர் அருகில் ஒரு பிளேடும் கிடந்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து உடனே காவல்துறைக்கு தகவல் கொடுத்த நிலையில், காவல்துறையினர் விரைந்து வந்து அவரது உடலை கைப்பற்றினர். இது பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் பல சந்தேகங்களையும் ஏற்படுத்தி உள்ளது.
இந்த மரணம் குறித்து சிவன்அருள் ஐஏஎஸ் தரப்பில் கூறப்பட்ட தகவலில், சுமதி கடந்த 2 ஆண்டு களாக மன அழுத்தத்துக்கான சுமதி சிகிச்சை பெற்று வந்ததாகவும், கடந்த 6 மாதங்களாக அவரது டாக்டர் மகள் தான் சுமதியை கவனித்து வந்ததாகவும் கூறப்பட்டது.
ஆனால், சுமதி தற்கொலை செய்துகொண்ட கூறப்படும் வேளையில், அவரது வீட்டில் வேலை செய்துவரும் பெண் வீட்டில் இருந்தாக கூறப்படுகிறது. ஆனால், சுமதி, பாத்ரூமிற்குச் சென்று தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது.
குளியலறை சென்றவர் வெகுநேரமாகியும் சுமதி வெளியே வராததால், சந்தேகமடைந்த வீட்டு வேலைக்கார பெண், கதவை தட்டிதாகவும், அவர் கதவை திறக்காததால், அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது, கழுத்தறுக்கப்பட்ட நிலையில் சுமதி இறந்து கிடந்திருக்கிறார்.அவரின் அருகில் பிளேடு ஒன்றும் இருந்திருக்கிறது.
ஆனால், ஒரு மனநிலை பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணால் தனது கழுத்தை தானே பிளேடைக் கொண்டு அறுக்க முடியுமா? என்று கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது. மேலும், கழுத்தை பிளேடால் எவ்வளவு நேரம் அறுத்திருக்க முடியும், அதுவரை அவர் சத்தம் போடாமல் இருந்தாரா? பிளேடைக் கொண்டு அவ்வளவு எளிதாக கழுத்து நரம்புகளை அறுக்க முடியுமா? மேலும் சுமதி மன அழுத்தத் துக்கு என்ன காரணம்? என்றும் இது ஏன் கொலையாக இருக்கக்கூடாது என பல்வேறு சந்தேகங் களை நெட்டிசன்கள் எழுப்பி வருகின்றனர்.
ஆனால், காவல்துறையினரோ, முதற்கட்ட விசாரணையில், சில மாதங்களாக சுமதி மன அழுத்தத் தில் இருந்து வந்ததாகவும், அதீத மன அழுத்தத்தில் இந்த விபரீத முடிவை எடுத்திருக்கலாம் என்று கூறியுள்ளனர்.
இந்த விவகாரத்தில் ஏதோ மர்மம் இருப்பதாக இணையதளங்களில் விமர்சிக்கப்பட்டு வருகிறது. ஆனால், காவல்துறை வழக்கை ஊத்தி மூடுவதிலேயே தீவிர கவனம் செலுத்துவதாக கூறப்படு கிறது.