‘மிஸ் கிரானி’ கொரிய படத்தின் தழுவலில் சமந்தா நடித்தது நினைவிருக்கலாம். அப்படம் ’ஓ பேபி’ என்ற பெயரில் வெளியானது. இதனைத் தொடர்ந்து மற்றுமொரு கொரியன் படத்தை தெலுங்கில் ரீமேக் செய்கின்றனர். ரெஜினா இதில் நடிக்கிறார்.
இந்தப் படம் தெலுங்கில் தயாராகி தெலுங்கு, தமிழ் இரு மொழிகளிலும் வெளியாகும்.
இந்த ரீமேக்கிற்கு ஷாகினி தாகினி என்று பெயர் வைத்துள்ளனர். ரெஜினாவும், நிவேதா தாமஸும் பயற்சி போலீஸ் அதிகாரியாக நடிக்கின்றனர். ஆக்ஷன் கலந்த காமெடிப் படமாக இது தயாராகிறது.
ஓ பேபி படத்தை தயாரித்தவர்களே இப்படத்தையும் தயாரிக்கின்றனர்.