டில்லி

ச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதில் இந்தியா தனது நாட்டின் நலனை கருத்தில் கொள்ளும் என ஈரான் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

ஈரானுடன் அமைத்திருந்த அணு ஆயுத ஒப்பந்தத்தில் இருந்து விலகிய அமெரிக்கா அதன் பிறகு அந்நாட்டுக்கு பொருளாதாரத் தடை விதித்தது. அத்துடன் அந்நாட்டில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய இந்தியா உள்ளிட்ட பல நாடுகளுக்கு தடை விதித்தது. இவ்வாறு கொள்முதல் செய்ய கடந்த மே மாதம் 2 ஆம் தேதிவரை அமெரிக்கா கெடு விதித்து இருந்தது..

ஈரானில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை இந்தியா முழுவதுமாக நிறுத்திக் கொண்டுள்ளது. இது ஈரான் நாட்டுக்கு மிகவும் அதிர்ச்சியை அளித்துள்ளது. இது குறித்து ஈரான் நாட்டு தூதர் அலி செர்கேணி,”மற்ற நாடுகளுடன் உள்ள இந்தியாவின் உறவு எவ்வகையிலும் ஈரானுக்கு எதிரானது அல்ல என்பதை நாங்கள் நன்கு அறிவோம்.

நாங்கள் இந்திய அரசின் முடிவுகளுக்கு மதிப்பு அளித்து வருகிறோம். ஆயினும் ஈரான் தனது நட்பு நாடு என்னும் அடிப்படையில் எதிர்காலத்தில் கச்சா எண்ணெய் இறக்குமதியை மீண்டும் தொடரும் என எங்களுக்கு நம்பிக்கை உள்ளது. இந்தியா இந்த விவகாரத்தில் தனது நாட்டின் நலனை கருத்தில் கொள்வோம் என்பதையும் நாங்கள் நம்புகிறோம்.

அவ்வாறு இந்தியா கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய முடிவு எடுக்கும் போது அந்த நாட்டின் ஆற்றலுக்கு ஒரு பாதுகாவலனாக ஈரான் விளங்கும். இந்தியா விரும்பும்படி ரூபாய் அல்லது யூரோ கரன்சி மூலமோ அல்லது பண்டமாற்று முறையிலோ கச்சா எண்ணெய் வர்த்தகம் செய்ய நாங்கள் தயாராக உள்ளோம்” என தெரிவித்துள்ளார்.